தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மராத்தான் ஒட்ட போட்டி தன்னம்பிக்கையோடு ஓடிய பெண்களும், முதியவர்களும்..
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோயிலில் இருபாலர்களுக்கான மராத்தான் ஓட்ட போட்டி. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் செம்பனார்கோவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தனர். முதலில் செம்பனார் கோயில் காவல் நிலையத்திலிருந்து 17 வயது முதல் 25 வயது வரையும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்குத் தனித்தனியாக மராத்தான் ஒட்ட போட்டி நடைபெற்றது. - 100 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் முதியவர்களும் கலந்து கொண்டனர். இது போல் ஆறுபாதியிலிருந்து மகளிருக்கான மராத்தான் ஓட்டப் போட்டி தொடங்கியது. அதில் குடும்ப பெண்களும் புடவை கட்டிக் கொண்டு கலந்து கொண்டனர் இருபாலரும் கலந்து கொண்ட மராத்தான் ஓட்ட போட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் முடிவுற்றது. இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments